தேர்தலை நடத்தி புதிய அரசை தெரிவு செய்ய மக்களுக்கு இடமளிக்க வேண்டும்! – மைத்திரி

4 view
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அனைத்து தலைவர்களும் பதவி விலகி தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இடமளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் நாட்டில் இதுபோன்று எவ்விதமான சூழ்நிலையும் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தனது ஆட்சியின் பின்னர் மிகவும் நல்லதொரு நாட்டை ராஜபக்ஷர்கள் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைப்பதே தமது நம்பிக்கை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
The post தேர்தலை நடத்தி புதிய அரசை தெரிவு செய்ய மக்களுக்கு இடமளிக்க வேண்டும்! – மைத்திரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース