மக்களுக்காக ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டோம் – ஜீவன்
4 view
மக்களுக்கானதே தனது அரசியல் பயணம் என்றும் அதனால்தான் ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டு, இன்று மக்கள் பக்கம் நிற்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுத்தது. ஆனால் எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஒரு சிலர் செயற்படுவதால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் என்பது எமது இலக்கல்ல என்பதை தேர்தல் காலத்திலேயே அறிவித்துவிட்டோம். கல்வியும் காணி உரிமையும்தான் பிரதான இலக்கு. அதனை அடைவதற்கே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளோம். எண்ணம்போல்தான் செயல் என்பார்கள். மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது கனவும்கூட. நான் பதவிக்காக அரசியல் செய்பவன் அல்லன்.…
The post மக்களுக்காக ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டோம் – ஜீவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்காக ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டோம் – ஜீவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
