தமிழக அரசின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த சுரேஷ்
35 view
யாழ்ப்பாணம்,மே 01 அத்தியாவசிய பொருட்கள் இன்றி அல்லல்படும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான தமிழக அரசின் தீர்மானம் தமிழக சட்டசபையில் கட்சிபேதமின்றி அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வரவேற்றும் தமிழக அரசின் மனிதாபிமான உதவிகளுக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் தமிழக அரசானது இந்திய ரூபாவில் 123 கோடி ரூபா பெறுமதியான அரசி, பருப்பு, மருந்து வகைகள், குழந்தைகளுக்கான பால்மா போன்றவற்றை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு அனுப்புவதாக எடுத்த தீர்மானத்தை தமிழக சட்டசபையில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஏற்றுக்கொண்டு, அதற்கு ஆதரவளித்து தீர்மானம் நிறைவேற்றியதையிட்டு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினராகிய நாம் தமிழக அரசிற்கும் தமிழக மக்களுக்கும் ஈழத் தமிழ் மக்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.…
The post தமிழக அரசின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த சுரேஷ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழக அரசின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த சுரேஷ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
