அரசின் திறைமையின்மையே டொலரின் அதிகரிப்பிற்கு காரணம்! ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் குற்றச்சாட்டு
4 view
தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும், அரசுக்கு எதிராகவும் பெண்கள் மஸ்தியஸ்தானத்தால் வவுனியாவில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பித்த குறித்த பேரணி மணிக்கூட்டு சந்தியை அடைந்து அங்கிருந்து மீண்டும் பழைய பேருந்து நிலையப்பகுதிக்கு சென்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாம் ஆடைத் தொழிலில் ஈடுபடுகின்ற பெண் தொழிலாளர்கள் ஆவோம். நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை கொண்டு வருவதற்கான உழைப்பை நாமே வழங்குகின்றோம். ஆடைத் துறையின் படையணியில் 85வீதமானவர்கள் நாமே. தனியார் பிரிவையும் ஊழியர் படையணியையும் ஊக்குவிக்கவும் பலப்படுத்துவதற்காக அரசாங்கம் வசதிகளை வழங்கியது முதலாளிமாருக்கு தவிர எமக்கு அல்ல. அதற்காக எமக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் எவை என நாம் அரசிடம் கேள்வியெழுப்புகின்றோம். ரூபாவை மிக மோசமான முறையில் இழிவுபெறச் செய்து, டொலரின் பெறுமதி உயர்ந்து சென்றதற்கு நிதி முகாமைத்துவத்தின் அரிச்சுவடி கூடத் தெரியாதவாறு செயலாற்றிய தற்போதைய அரசாங்கத்தின் திறமையே காரணம். இன்று விலைவாசி…
The post அரசின் திறைமையின்மையே டொலரின் அதிகரிப்பிற்கு காரணம்! ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசின் திறைமையின்மையே டொலரின் அதிகரிப்பிற்கு காரணம்! ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
