அண்ணனின்…
4 view
அண்ணனின் ஆட்சியிலும் நீதி இல்லை, தம்பியின் ஆட்சியிலும் நீதியை எதிர்பார்க்க முடியாது. நீதி இல்லாத நாட்டில் தற்போது நிதியும் இல்லை. ஆனால், இல்லாத நீதிக்கும், நிதிக்கும் ஒரு அமைச்சர் மட்டும் இருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உண்மையில் சிவராம் என்பவர் சிரோஸ்ட ஊடகவியலாளர் என்பதைத் தாண்டி அவர் ஒரு சிறந்த அரசியற் போராளியாக இருந்தார். என்னுடைய காலத்திலே என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர் மாத்திரமல்லாமல் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளராகவு இருந்தார். நான் அப்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக இருந்தேன். மிகவும் நெருக்கமானவராக அவர் இருந்தார். அவரது…
The post அண்ணனின்… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அண்ணனின்… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
