‘ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து’ ‘கோட்டாகோகம’ வரைக்கும்! சிங்கம் – ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன்!
4 view
அண்மைக் காலமாக இலங்கையின் தென்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் உருவாகிய ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் நாடெங்கிலும் பேசு பொருளாகியுள்ளது. இந்த அடிப்படையில் ஏப்ரல் மாத ஆரம்ப காலத்திலிருந்து இளைஞர் குழுமங்கள் முகாமிட்டு போராடத் தொடங்கியுள்ளன. அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக, அரசில் இருப்பவர்கள் சிலரும், அரசுக்கு எதிரானவர்களும் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இப்போராட்டம் தொடங்கியதிலிருந்து பல மாற்றங்களையும், உருமாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டம் தெற்கில் நடைபெறுகின்ற அதேவேளை, எத்தனையோ போராட்டங்களை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்கள் அல்லது இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ள மக்கள் பல ஆண்டுகளாக தமது உரிமைகளுக்காகச் செய்து வந்தபோதும், தென்பகுதி மக்களால் அவற்றுக்கான அங்கீகாரம் போதியளவு வழங்கப்பட்டிருக்கவில்லை. இருந்தும், தற்போது அரசுக்கு எதிராக இடம்பெறுகின்ற போராட்டத்தில் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த மக்கள் இணைந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்த போதும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பங்கேற்பென்பது ஒப்பீட்டளவில் பெரிதும் குறைவாகவே உள்ளது. இந்த அடிப்படையில்…
The post ‘ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து’ ‘கோட்டாகோகம’ வரைக்கும்! சிங்கம் – ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து’ ‘கோட்டாகோகம’ வரைக்கும்! சிங்கம் – ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
