மகா நாயக்கர்களின் தலையீடு: தீர்வைத் தருமா? நிலாந்தன்.
13 view
இம்மாதம் நான்காம் திகதி நான்கு மகா நாயக்கர்களும் அரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.ஆனால் கோட்டாபய அதற்கு பதில் கூறவில்லை. அதன்பின் 20ஆம் திகதி மற்றொரு கடிதத்தை எழுதினார்கள். அதன்பின் கடந்த வாரம் அரசுத்தலைவர் மகா நாயக்கர்களுக்கு ஒரு பதில் அனுப்பியிருந்தார். மகா நாயக்கர்கள் அனுப்பிய கடிதத்தில் ஒரு முக்கிய விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்கள்.நாட்டில் இப்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் தீர்க்க தவறினால் மகாசங்கம் சங்கப் பிரகடனத்தைச் செய்யும் என்பதே அதுவாகும். சங்கப் பிரகடனம் எனப்படுவது சிங்களத்தில் “சங்க ஆக்ஞாபய” என்று அழைக்கப்படுகிறது.மன்னர்களின் காலத்தில் அது பிரயோகத்தில் இருந்திருக்கிறது.ஒரு மன்னன் சரியானபடி ஆட்சி செய்யவில்லை என்றால் அந்த ஆட்சியை எதிர்த்து மகாசங்கம் ஒரு பிரகடனத்தை செய்யும். அப்பிரகடனத்தின்படி குறிப்பிட்ட மன்னன் ஆட்சி செய்யும் தகுதியற்றவன் என்று கருதப்பட்டது.அந்த மன்னன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மகாநாயக்கர்கள் அல்லது ஏனைய மகா சங்கத்தின் பிரதிநிதிகள் பங்குபற்ற மாட்டார்கள்.பிக்குகள் பங்குபற்றும் மத நிகழ்ச்சிகளில் அந்த மன்னன்…
The post மகா நாயக்கர்களின் தலையீடு: தீர்வைத் தருமா? நிலாந்தன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகா நாயக்கர்களின் தலையீடு: தீர்வைத் தருமா? நிலாந்தன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
