சிங்கள பேரினவாத கொள்கையுடையவர்களுடன் சேர்ந்து போராட முடியுமா?-சிறிதரன்!
13 view
”தமிழர்களின் உரிமையை சிங்கள தேசம் ஏற்றுக் கொண்டால் மாத்திரமே பொருளாதாரத்திலும் அரசியலிலும் வெற்றி காண முடியும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்! கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையின் மறைந்த முன்னாள் அதிபர் திரு கனகராஜா மகேந்திரராஜா அவர்களது நினைவு நிகழ்வும் பொற்கால மலர் எனும் நூல் வெளியீட்டு விழாவும் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்! தென்பகுதியில் சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடுகிறார்கள்,இந்தப் போராட்டத்தில் தமிழர்களுடைய பங்கு என்ன என்று என்னிடம் ஒருவர் கேட்டிருந்தார். தங்களுடைய கணவன்மாரை ஒப்படைத்த எங்களுடைய சகோதரிகள், தாய்மார்கள் தங்களுடைய கணவன் வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த சிங்கள சகோதரர்களால் பதில் கூற முடியுமா? என்று கேட்டிருந்தேன். ஆயிரமாயிரம் உயிர்களை இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம். தமிழர்களுடைய வரலாற்று தாயகம் வடக்கு கிழக்கு…
The post சிங்கள பேரினவாத கொள்கையுடையவர்களுடன் சேர்ந்து போராட முடியுமா?-சிறிதரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிங்கள பேரினவாத கொள்கையுடையவர்களுடன் சேர்ந்து போராட முடியுமா?-சிறிதரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
