T-56 ரக துப்பாக்கிக் தோட்டாக்களுடன் பெண் கைது

4 view
கஹட்டகஸ்திகிலிய – பலுகெடுவெவ பிரதேசத்தில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து T-56 துப்பாக்கி, 03 மகசீன்கள் மற்றும் 184 தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் தொகையொன்று பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என ​பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதோடு, அவரை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
The post T-56 ரக துப்பாக்கிக் தோட்டாக்களுடன் பெண் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース