மே தினத்தன்று கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளோம்! மலையக மக்கள்
4 view
தொழில் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்பட்டு, நிர்வாகத்தின் கெடுபிடிகள் உச்சம் தொட்டுள்ள சூழ்நிலையிலேயே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இம்முறை மே தினத்தை எதிர்கொள்கின்றனர். ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்க தரப்புகளில் இருந்து தமக்கு உரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தியில் இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மே தின நிகழ்வுகள் தொடர்பில் இம்முறை அக்கறை காட்டாமல் இருப்பதை காணமுடிகின்றது. மே முதலாம் திகதி என்பது தொழிலாளர்களுக்கான தினமாகும். அந்நாளையும் நம் நாட்டு அரசியல் வாதிகள், அரசியல் மயப்படுத்திவிட்டனர். அதனால் எமக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இம்முறை வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு, எமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளோம். என தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். சர்வதேச தொழிலாளர் தினம் நாளை (01.05.2022) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இலங்கையிலும் கூட்டங்களும், பேரணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலையகத்திலும் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. எனினும், மே தினம் குறித்து மக்கள் இம்முறை அதிருப்தி…
The post மே தினத்தன்று கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளோம்! மலையக மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மே தினத்தன்று கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளோம்! மலையக மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
