பௌத்த, சிங்கள பேரினவாத கொள்கையோடு போராடினால் உங்களுடன் நாங்கள் சேர்ந்து போராட முடியுமா? – சிறிதரன் கேள்வி
26 view
இலங்கைத் தீவில் நாங்கள் நாங்களாக வாழுகின்ற உரிமையும் நீங்கள் நீங்களாக வாழுகின்ற உரிமையும் எப்போது இருக்கின்றது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டால் மாத்திரமே பொருளாதாரத்திலும் அரசியலிலும் வெற்றி காண முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையின் மறைந்த முன்னாள் அதிபர் கனகராஜா மகேந்திரராஜா அவர்களது நினைவு நிகழ்வும் பொற்கால மலர் என்ற நூல் வெளியீட்டு விழாவும் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தென்பகுதியில் சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடுகிறார்கள். பச்சிளம் பாலகர்கள் கூட இறங்கிப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் உங்களுடைய பங்கு என்ன என்று என்னிடம் ஒருவர் கேட்டிருந்தார். எங்கள் உறவுகள் தங்களுடைய கணவன்மாரை ஒப்படைத்த எங்களுடைய சகோதரிகள் தாய்மார்கள் தங்களுடைய தன்னுடைய கணவன் வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த சிங்கள…
The post பௌத்த, சிங்கள பேரினவாத கொள்கையோடு போராடினால் உங்களுடன் நாங்கள் சேர்ந்து போராட முடியுமா? – சிறிதரன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பௌத்த, சிங்கள பேரினவாத கொள்கையோடு போராடினால் உங்களுடன் நாங்கள் சேர்ந்து போராட முடியுமா? – சிறிதரன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
