நாடு முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்தாலும், வடகிழக்கை அடக்குவதில் அரசு குறியாக இருக்கின்றது! – சுமந்திரன் குற்றச்சாட்டு
5 view
நாடு முழுவதும் மக்கள் கிளந்தெழுந்திருக்கின்ற போதும் கூட, எங்களது வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களிலே எந்தவித சத்தங்களும் கேட்கக்கூடாது என்ற வகையிலே அரசாங்கம் செயற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்றைய தினம் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் தராகி சிவராம் அவர்களின் 17ஆவது நினைவு நிகழ்வும், நீதி கோரிய போராட்டமும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, அமரர் சிவராமின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி, மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வேண்டிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்…
The post நாடு முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்தாலும், வடகிழக்கை அடக்குவதில் அரசு குறியாக இருக்கின்றது! – சுமந்திரன் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்தாலும், வடகிழக்கை அடக்குவதில் அரசு குறியாக இருக்கின்றது! – சுமந்திரன் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
