கைதான நான்கு பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
36 view
ரம்புக்கனை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மற்றும் கண்டி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரம்புக்கனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நேற்று இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது ரம்புக்கனையில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட அனைத்து அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதிவான் பொலிஸ்மா அதிபருக்கு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கேகாலை நீதவான் பிறப்பித்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பொலிஸ்மா அதிபர் சி.டீ. விக்கிரமரத்ன, குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன நேற்று…
The post கைதான நான்கு பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைதான நான்கு பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
