கல்முனையில் பல்லின சமூகத்தினர் கலந்து கொண்ட இப்தார் நிகழ்வு.
4 view
சமாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் அனுசரணையில் இயங்கும் அம்பாறை மாவட்ட பிரதேச நல்லிணக்க மன்றங்கள் ஒன்றிணைந்து இஸ்லாமியர்களின் புனித நோன்பினை முன்னிட்டு சகல இனத்தவரையும் ஒன்றினைத்து நோன்பு திறக்கும் (இப்தார் நிகழ்வு) கல்முனையில் உள்ள தனியார் மண்டபமொன்றில் நேற்றுமுன்தினம்(27) மாலை நடைபெற்றது. பௌத்தம்,இந்து,இஸ்லாமிய,கத்தோலிக்க ஆகியபல்லின சமூகத்தினர் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர் . அம்பாரை மாவட்ட நல்லிணக்க மன்ற மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அஸீஸ் கல்முனை நல்லிணக்கமன்ற இணைப்பாளர் வீ.தங்கவேல் ஆகியோரின் இணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள்,அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்,கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த புத்திக,கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்சின் பக்கீர் சமாதனமும் சமூகப்பணி நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் டி.தயாபரன், சமாதானமும் சமூக பணி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டி.இராஜேந்திரன் உட்பட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்கள்,மாவட்ட நல்லிணக்க குழு இணைப்பாளர்கள்,பிரதேச நல்லிணக்க மன்ற இணைப்பாளர்கள்,கல்முனை,கல்முனைவடக்கு,அட்டாளைச்சேனை,அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு,திருக்கோவில்,பொத்துவில்,தமன,லகுகல,அம்பாரை ஆகிய பிரதேச செயலக பிரிவில் உள்ள…
The post கல்முனையில் பல்லின சமூகத்தினர் கலந்து கொண்ட இப்தார் நிகழ்வு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனையில் பல்லின சமூகத்தினர் கலந்து கொண்ட இப்தார் நிகழ்வு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
