நாசகார பொருளாதார கட்டமைப்பை வீழ்த்த புரட்சிகர மே தினத்தில் அணிதிரளுங்கள்! – புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழைப்பு
4 view
உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள், நடைமுறையில் உள்ள நாசகார பொருளாதார கட்டமைப்பை வீழ்த்தி, உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நோக்கி புரட்சிகர மே தினத்தில் அணிதிரள்வோம் என்ற கோசத்தினை முதன்மைப்படுத்திப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதின முன்னெடுப்புகள் எதிர்வரும் மே முதலாம் திகதியன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளன. குறித்த தினத்தில் பி.ப. 2.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மேதினப் பேரணி ஆரம்பமாக உள்ளதுடன், மேதினப் பொதுக்கூட்டம் பி.ப. 4 மணியளவில் பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. கட்சியின் வட பிராந்திய செயலாளரும் வலி. கிழக்குப் பிரதேச சபையில் அங்கத்துவம் வகிக்கும் சுயேட்சைக் குழுவின் தலைவருமான தோழர் கா. செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள இப் பொதுக்கூட்டத்தில், சிறப்புரைகளைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல், தேசிய அமைப்பாளர் தோழர் வெ. மகேந்திரன், அரசியற் குழு உறுப்பினர் தோழர் சோ. தேவராஜா, சர்வதேச அமைப்பாளர் தோழர் எஸ்.என். கிருஸ்ணப்பிரியன்,…
The post நாசகார பொருளாதார கட்டமைப்பை வீழ்த்த புரட்சிகர மே தினத்தில் அணிதிரளுங்கள்! – புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாசகார பொருளாதார கட்டமைப்பை வீழ்த்த புரட்சிகர மே தினத்தில் அணிதிரளுங்கள்! – புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
