இலங்கையின் நெருக்கடி குறித்து வெளியான பாடல்!
15 view
தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான T.ராஜேந்தர் இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த பாடலை வெளியிட்டுள்ளார். சாதனை தமிழா தயாரிப்பில், இலங்கையின் பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் எழுதிய “நாங்க வாழணுமா, சாகணுமா சொல்லுங்க” எனும் பாடலை T.ராஜேந்தர் பாடியுள்ளதுடன், சமீல் இசையமைத்துள்ளார். இது குறித்து நடைபெற்ற பத்திரிகை சந்திப்பில் இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியதாவது: இலங்கை மக்களுக்காக அங்கு அவர்கள் படும் கஷ்டத்திற்காக இந்தியா 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உதவியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி. இந்த நிலையில் இலங்கையில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. அந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில், இலங்கை கவிஞர் அஷ்மின் உடன் இணைந்து, இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில், உருவான பாடலை நான் பாடியிருக்கிறேன். “நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க, நீங்க சொல்லுங்க” என்ற பாடலை பாடியுள்ளேன். இலங்கையில் போராடும் மக்களின் படும் அவஸ்தையை, வலியை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப்பாடலை பாடியுள்ளேன். தமிழ்…
The post இலங்கையின் நெருக்கடி குறித்து வெளியான பாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் நெருக்கடி குறித்து வெளியான பாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
