நெருக்கடி நிலைமைக்கு ஜனாதிபதியே காரணம்! – சுமந்திரனிடம் பிரதமர் தெரிவிப்பு
39 view
நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுமந்திரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்தார். நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. பிரதமரின் அழைப்பின்பேரில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இதில் பிரதமரின் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் பிரதமரின் பிரதிநிதியுமான கீதநாத் காசிலிங்கமும் பங்கேற்றிருந்தார். இந்த சந்திப்பில், “20ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் காணப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி மீண்டும் 19ஆவது திருத்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சரவை அனுமதிக்கான முன்மொழிவை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்மொழியவுள்ளேன். 21ஆவது திருத்தச்சட்டமாக வரவுள்ள இந்த முன்மொழிவுடன் மேலதிகமாக இணைக்கப்பட…
The post நெருக்கடி நிலைமைக்கு ஜனாதிபதியே காரணம்! – சுமந்திரனிடம் பிரதமர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெருக்கடி நிலைமைக்கு ஜனாதிபதியே காரணம்! – சுமந்திரனிடம் பிரதமர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
