கதிரவெளியில் அமைக்கப்படவுள்ள இல்மனைற் தொழிற்சாலைக்கு தீர்வு என்ன?
39 view
மட்டக்களப்பு வாகரை பிரதேச சபையில் ஜனநாயக பங்குதாரர்கள் ஒன்றினைந்த மக்கள் குறைதீர் மன்ற அரங்கம் என்ற செயல் திட்டத்தின் கீழ் ஒன்று கூடல் நீகழ்வு இன்று நடைபெற்றது. இந் நிகழ்வினை அகம் மனிதாபிமான வள நிலையம் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பிரதேச சபை உறுப்பினர்கள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகிய 3 தரப்பினரையும் ஒன்றினைத்து வாகரை பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மத்திய அரசாங்கம் மற்றும் பிரதேச சபையினால் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு கலந்துரையாடப்பட்டது. இதில் குறிப்பாக கதிரவெளியில் அமைக்கப்படவுள்ள இல்மனைற் தொழிற்சாலை,இறால் வளர்ப்பு பண்ணை,காணி அபகரிப்பு ,மணல் அகழ்வு, சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, இளவயது திருமணம்,சிறுவர் துஷ்பிரயோகம்,சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையான சுருக்கு வலை பாவித்து மீன் பிடித்தல்,வேலைவாய்ப்பு,என்பன போன்ற பல்வேறு விடயங்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பிரதேச சபை தொடர்பான விடயங்களான குடி நீர் பிரச்சினை,வீதி…
The post கதிரவெளியில் அமைக்கப்படவுள்ள இல்மனைற் தொழிற்சாலைக்கு தீர்வு என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கதிரவெளியில் அமைக்கப்படவுள்ள இல்மனைற் தொழிற்சாலைக்கு தீர்வு என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
