நாட்டை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி வெற்றிப்பெறுவதற்கான ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை – செந்தில் தொண்டமான்
40 view
நாட்டை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் மீண்டும் எடுத்துள்ள முயற்சி வெற்றிப்பெறுவதற்கான ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மலையக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, இந்த அரசாங்கத்துடன் பயணிக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு மக்கள் ஆணை வழங்கினர். இந்நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்தே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார். தற்போதைய சூழ்நிலையில், மலையக மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாத காரணத்தினால் தான், தனது அமைச்சுப் பதவியை ஜீவன் தொண்டமான் இராஜினாமா செய்திருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சிறந்த அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக செயல்பட்ட போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அவர்களாலே சமாளிக்க முடியாத சூழ்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட…
The post நாட்டை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி வெற்றிப்பெறுவதற்கான ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை – செந்தில் தொண்டமான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி வெற்றிப்பெறுவதற்கான ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை – செந்தில் தொண்டமான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
