மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களை விரைவில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை!
20 view
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை குறித்து இன்று பாராளுமன்றத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறி, தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் இன்றைய நாடாளுமன்ற சபை ஒத்திவைப்பு வேளையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன, குறித்த நியமனங்களை பின்னர் வழங்குவது பொருத்தமானதாகும் என முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் மத்திய மாகாண செயலாளருக்கு சுற்றுநிருபம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த சுற்று நிருபமே குறித்த நியமனங்களை வழங்குவதற்கு தடையாகவுள்ளது. மத்திய மாகாணம் மாத்திரம் இன்றி நாடளாவிய ரீதியில் புதிய நியமனங்கள் வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த நியமனங்கள் ஏனைய மாகாணங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதால், அது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை விரைவில்…
The post மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களை விரைவில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களை விரைவில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
