அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும்? இரா.துரைரெட்ணம் கேள்வி
5 view
பொருள் கொள்வனவிற்கே நாட்டில் நிதி இல்லாத நிலையில் அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். இன்றைய தினம் மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அரசுக்குச் சார்பாகச் செயற்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு அதிகாரமுள்ள அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.ஆனால், மட்டக்களப்பில் அரசோடு செயற்பட்டு வரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் குறைந்த இராஜாங்க அமைச்சுகளும், அரசிற்கு எதிராக வாக்கெடுத்து வந்த முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் வழங்கப்பட்ட புதிய அமைச்சரவை விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயற்பட்ட இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் குறைந்த, அதிகாரமற்ற இரராஜாங்க அமைச்சர் பதவியும், இந்த அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்து இந்த…
The post அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும்? இரா.துரைரெட்ணம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும்? இரா.துரைரெட்ணம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
