தமிழர்களை கொலை செய்யும் போது சிங்கள மக்கள் வேடிக்கை பார்த்தது போன்று நாங்கள் இருக்கமாட்டோம் – இரா.சாணக்கியன்!
13 view
மனித படுகொலைக்கு எதிராக தற்போது சிங்கள மக்களுடன் ஒன்றினைந்துள்ளோம். படுகொலைக்கு இனி இடமளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் காலி முகத்திடல் பக்கம் சென்றால் சுவையான உணவு உண்டுவிட்டு வரலாம். சமிந்த லக்ஷான் என்ற இளைஞரின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்ததையிட்டு கவலையடைகிறேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இந்த அரசாங்கத்தின் படுகொலையினை 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து எதிர்க்கொண்டு வருகிறார்கள். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலத்திலிருந்து பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். அளுத்கம, திகன, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தினர் இந்நிலைமையை எதிர்க்கொண்டுள்ளார்கள். அக்காலப்பகுதியில் இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தற்போது…
The post தமிழர்களை கொலை செய்யும் போது சிங்கள மக்கள் வேடிக்கை பார்த்தது போன்று நாங்கள் இருக்கமாட்டோம் – இரா.சாணக்கியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களை கொலை செய்யும் போது சிங்கள மக்கள் வேடிக்கை பார்த்தது போன்று நாங்கள் இருக்கமாட்டோம் – இரா.சாணக்கியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
