கடமை நேரத்தில் டிக்டொக் வீடியோ பதிவிட்ட உத்தியோகத்தருக்கு இடமாற்றம்
4 view
வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய பெண் உத்தியோகத்தர் ஒருவர் கடமை நேரத்தில் டிக்டொக் வீடியோ பதிவு செய்தமை சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து வைத்தியசாலை பணிப்பாளரினால் குறித்த உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது . மேலும் தெரியவருகையில், வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் கடமை நேரத்தில் டிக்டொக் வீடியோவை பதிவு செய்துள்ளார் .குறித்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தகாத வார்த்ததைப் பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதேவேளை கடமை நேரத்தில் டிக்டொக் வீடியோவைப் பதிவு செய்த பெண் உத்தியோகத்தருக்கு வைத்தியசாலை பணிப்பாளரினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அரச ஊழியர் ஒருவர் அதுவும் வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் இவ்வாறு டிக்டொக் வீடியேவை கடமை நேரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை அர்ப்பணிப்புக்கள்…
The post கடமை நேரத்தில் டிக்டொக் வீடியோ பதிவிட்ட உத்தியோகத்தருக்கு இடமாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடமை நேரத்தில் டிக்டொக் வீடியோ பதிவிட்ட உத்தியோகத்தருக்கு இடமாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
