அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!

8 view
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு  தீர்மானித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இதற்கு உரிய தீர்வுகாணுமாறு தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லை என்றும் பைசல் காசிம் தெரிவித்தார். எனவே, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து இன்று முதல் தாம் விலகுவதாக அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோர் இதுவரை காலம் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து செயற்பட்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース