ஹக்கீம் தொடர்பில் நஷீர் அஹமட்டின் வாக்குமூலத்தால் பரபரப்பு.
31 view
தற்போதைய அரசாங்கத்துடன் எங்களை இணைத்து விட்டவர் முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம்தான் என அமைச்சர் நஷீர் அஹமட் தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்றிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் வீட்டிடுக்கு 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் தேதி மிலிந்த மொரகொடவுடன் (தற்போதைய இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர்) ஒரு தடவை சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வைச் சந்தித்து தனக்குத் தேவையான அனைத்து ஒப்பந்தங்களையும் செய்து முடித்தார்” என்றும் ஹாபிஸ் நஷீர் தெரிவித்தார். இதேவேளை அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றில் ஆதரவு வழங்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களான தமக்கு – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்தான் கூறியதாகவும் ஹாபிஸ் நஷீர் குறிப்பிட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய வீட்டுக்கு 2020 ஒக்டோபர் 18ஆம் தேதி பெஷில் ராஜபக்ஷ்…
The post ஹக்கீம் தொடர்பில் நஷீர் அஹமட்டின் வாக்குமூலத்தால் பரபரப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹக்கீம் தொடர்பில் நஷீர் அஹமட்டின் வாக்குமூலத்தால் பரபரப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
