நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு: செபெட்கோ அறிவிப்பு!
3 view
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும். அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
The post நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு: செபெட்கோ அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு: செபெட்கோ அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
