இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த
2 view
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த சத்தியக்கடதாசியை இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். தமது சொத்து விபரங்களை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த 14 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த சொத்து மற்றும் பொறுப்புக்கள் குறித்த சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
The post இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
