பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கான உலருணவுப்பொதிகள் வழங்கிய கிளிநொச்சி பொலிஸார்!
1 view
கிளிநொச்சி பொலிஸாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம் தலைமையில் நடைபெற்றது . குறித்த உலருணவுப்பொதி உதயநகர் கிராமத்தைச்சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்திரசேன,கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த சில்வா, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்து கொண்டனர்.
The post பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கான உலருணவுப்பொதிகள் வழங்கிய கிளிநொச்சி பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கான உலருணவுப்பொதிகள் வழங்கிய கிளிநொச்சி பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.