வவுனியா மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!
5 view
வவுனியா மாநகரசபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். வவுனியா நகரசபையாக இருந்து மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் ஆணையாளராக இதுவரை வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் செயற்பட்டிருந்தார். இந்தநிலையில் புதிய ஆணையாளராக வடமாகாண மகளீர்விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளராக இதுவரை கடமையாற்றிய பொ.வாகீசன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகத்தினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய ஆணையாளர் இன்றையதினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
The post வவுனியா மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.