முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா! ஒருவர் உயிரிழப்பு ,ஒருவர் படுகாயம்!
5 view
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா! ஒருவர் உயிரிழப்பு ,ஒருவர் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா! ஒருவர் உயிரிழப்பு ,ஒருவர் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.