ஊழலுக்கு உதவிய உயர் அரச அதிகாரிகள் பலரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பம்
8 view
ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்த சுமார் 18 உயர் அரச அதிகாரிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட விசாரணைக் குழுக்கள் இதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளையும் விசாரணைக் குழுக்கள் ஆராய்ந்து வருகின்றது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட, 5 உயர் அரச அதிகாரிகள் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post ஊழலுக்கு உதவிய உயர் அரச அதிகாரிகள் பலரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழலுக்கு உதவிய உயர் அரச அதிகாரிகள் பலரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.