அர்ச்சுனாவுக்கு விதிக்கப்பட்டது தடை – சபாநாயகர் அதிரடி உத்தரவு!
6 view
அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் விமர்சனங்களால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையில் அறிவித்தார். இதன்படி அவரது வெறுப்பு பேச்சுக்களை ஹன்சார்ட் பதிவிலிருந்தும் நீக்குமாறு அவர் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
The post அர்ச்சுனாவுக்கு விதிக்கப்பட்டது தடை – சபாநாயகர் அதிரடி உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அர்ச்சுனாவுக்கு விதிக்கப்பட்டது தடை – சபாநாயகர் அதிரடி உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.