தனது கழுத்தை தானே அறுத்த பெண்- யாழ். சண்டிலிப்பாயில் பரபரப்பு!
2 view
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் – தொட்டிலடி பகுதியில் இளம் பெண்ணொருவர் தனது கழுத்தினை தானே கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார். இதனால் குறித்த பெண்ணின் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் குறித்த பெண் யார்? எந்த இடத்தை சேர்ந்தவர், கழுத்தினை அறுத்ததற்கான காரணம் என்ன? என்ற தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. மானிப்பாய் பொலிஸார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
The post தனது கழுத்தை தானே அறுத்த பெண்- யாழ். சண்டிலிப்பாயில் பரபரப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனது கழுத்தை தானே அறுத்த பெண்- யாழ். சண்டிலிப்பாயில் பரபரப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.