நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் திடீர் தீ விபத்து – எரிந்து நாசமான மருந்துகள்
11 view
நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் இன்று (18) காலை மருந்துப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் திடீர் தீ பரவியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். அதன்போது, பொலிஸார் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்களை கொண்டு வந்த போதிலும், அதற்குள் அனைத்து மருந்துகளும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையின் மருந்துக் கடையிலுள்ள மருந்துகள் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணக்காய்வு நடத்தப்பட்டதாகவும், மருந்துக் கடை தீப்பற்றியதில் சந்தேகம் இருப்பதாகவும் நவகமுவ பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
The post நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் திடீர் தீ விபத்து – எரிந்து நாசமான மருந்துகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் திடீர் தீ விபத்து – எரிந்து நாசமான மருந்துகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
