சூடுபிடிக்கும் யாழ்.மாநகர சபை விவகாரம் – தொங்குசபை ஆட்சி வேண்டாம்! உறுப்பினர் கணேசராஜா
16 view
தொங்கு சபையிலுள்ள யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் பதவியினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் கணேசராஜா தெரிவித்துள்ளார். தமக்கு ஆதரவாக மூன்று உறுப்பினர்கள் உள்ளதாகவும் எனவே தொங்கு சபையில் பதவிகளை பெற்று, அதனை கொண்டு நடத்த முடியாது என்றும் இதற்கு முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் சிறந்த உதாரணம் என கணேசராஜா மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் மணிவன்னண் தன்னிச்சையாக தாமே முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருப்பது ஒரு ஏமாற்று நாடகம். மாநகர சபையின் கட்டளை சட்டத்தின் படி பாதீடு இரண்டு முறை தோற்கும் பட்சத்தில் முதல்வர் பதவி இழக்கப்படும் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
The post சூடுபிடிக்கும் யாழ்.மாநகர சபை விவகாரம் – தொங்குசபை ஆட்சி வேண்டாம்! உறுப்பினர் கணேசராஜா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூடுபிடிக்கும் யாழ்.மாநகர சபை விவகாரம் – தொங்குசபை ஆட்சி வேண்டாம்! உறுப்பினர் கணேசராஜா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
