பௌத்தர்களின் புனித தன்மையை அவமதித்த யூடியூபர் சேபால் அமரசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- விஜயதாச உறுதி!
6 view
பௌத்தர்களின் புனித தன்மையை அவமதித்துள்ள யூடியூபர் சேபால் அமரசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இந்த விடயம் பேசுபொருளாக கேள்விகள் எழுப்பட்டிருந்தன. இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே நீதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீ தலதா வஹன்சே என்பது இலங்கையர்களுக்கு மாத்திரமல்ல, முழு உலக பௌத்த மக்களின் அடையாளமாகும், எனவே அதனை அவமதிப்பதற்கு இவ்வுலகில் எவருக்கும் உரிமை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேபால் அமரசிங்க மிகவும் வெட்கக்கேடான வகையில் சமூக ஊடகங்களினூடாக அவமானப்படுத்தினார். இன்று கௌரவ மகா சங்கத்தினரும் பௌத்த மக்களாகிய நாமும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட விதி 290 கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். இந்த நாட்டில் மத மோதலை ஏற்படுத்த முயலும் இவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவோமென அரசாங்கம் என்ற ரீதியில் தெளிவாக கூறுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
The post பௌத்தர்களின் புனித தன்மையை அவமதித்த யூடியூபர் சேபால் அமரசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- விஜயதாச உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பௌத்தர்களின் புனித தன்மையை அவமதித்த யூடியூபர் சேபால் அமரசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- விஜயதாச உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
