'ஹெல்மெட்' கழன்று விழுந்ததால் ஏற்பட்ட கோர விபத்து – யாழில் இருவருக்கு ஏற்பட்ட கதி
8 view
வெற்றிலைக்கேணியில் இன்று காலை நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இதில், மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெற்றிலைக்கேணியிலுள்ள பாடசாலையொன்றில் இறக்கி விட்டு ஆழியவளைக்கு திரும்பி வந்துள்ளார். இதன்போது, அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டின் பட்டி இணைக்கப்பட்டிருக்கவில்லையென்றும், ஹெல்மெட் கழன்று விழுந்ததை தொடர்ந்து விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடற்கரையிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும் பிரதேச செயலக உத்தியோகத்தரும் மோதி விபத்திற்குள்ளாகினர். ஆபத்தான நிலையிலிருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். உடனடியாக மேலதிக சிகிச்சைக்கான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த மற்றையவரும் அங்கிருந்தவர்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
The post 'ஹெல்மெட்' கழன்று விழுந்ததால் ஏற்பட்ட கோர விபத்து – யாழில் இருவருக்கு ஏற்பட்ட கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'ஹெல்மெட்' கழன்று விழுந்ததால் ஏற்பட்ட கோர விபத்து – யாழில் இருவருக்கு ஏற்பட்ட கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
