இனப் பிரச்சினை பேச்சுவார்த்தையை தமிழ் தரப்புக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்- ஆறு. திருமுருகன் கோரிக்கை!
6 view
இன்றைய சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன் வந்திருப்பது என்பது உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாகும்.இந்த நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக தமிழர்களுடைய பிரச்சினைகள் தீர வேண்டும் என்ற நோக்கோடு ஒருமித்த குரலாக தமது ஆற்றல்களை பயன்படுத்த வேண்டும் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனவே கட்சிகள் சாராது ஒரு ஆன்மிகம் சார்ந்த,பொது மகன் என்ற வகையில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் சார்ந்தவர்களையும் அன்பாக வேண்டிக்கொள்வது என்னவெனில், நாடு பொருளாதார ரீதியில் மிக மோசமாக வீழ்ச்சியடைந்த நிலையில் தற்சமயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்காக தமிழர் தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கும சந்தர்ப்பத்தை பயனுள்ளதாகப் பயன்படுத்துவதே சிறந்ததாகும். கடந்த காலத்தில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் மூலம் முழுமையான தீர்வினை…
The post இனப் பிரச்சினை பேச்சுவார்த்தையை தமிழ் தரப்புக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்- ஆறு. திருமுருகன் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனப் பிரச்சினை பேச்சுவார்த்தையை தமிழ் தரப்புக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்- ஆறு. திருமுருகன் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
