கிளிநொச்சியில் 26 வயது இளைஞன் கத்தியால் குத்திக்கொலை !
16 view
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (01) அதிகாலை 4 மணியளவில் திடீரென வீட்டினுள் நுழைந்தவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேற்படி சம்பவத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தவகுமார் சுரேஸ் என்ற 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். The post கிளிநொச்சியில் 26 வயது இளைஞன் கத்தியால் குத்திக்கொலை ! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post கிளிநொச்சியில் 26 வயது இளைஞன் கத்தியால் குத்திக்கொலை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் 26 வயது இளைஞன் கத்தியால் குத்திக்கொலை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
