நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு- சுகாதார அமைச்சர் உறுதி!
16 view
தற்போதைய மருந்து தட்டுப்பாடு இந்த வருடத்தின் முதல் காலாண்டில் பூச்சியமாக குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், நாட்டின் போதைப்பொருள் பிரச்சினையை தீர்க்க ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல சர்வதேச நிறுவனங்கள் தேவையான ஆதரவை இந்திய கடனுதவியுடன் வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கண்டியில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். 183 வகையான அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டபோது, மூன்று நிறுவனங்கள் மட்டுமே முன்வந்ததாகவும், ஒரு மாதத்தின் பின்னர் அந்த நடவடிக்கையில் இருந்து அவையும் விலகிவிட்டதாகவும் அமைச்சர் கூறினார். மருந்து நிறுவனங்களுக்கு அரசாங்கம் 15 பில்லியன் ரூபாவும், இரண்டு அரச வங்கிகளுக்கு 16 பில்லியன் ரூபாவும், ஏனைய கொடுப்பனவுகள் உட்பட 52 பில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டியுள்ளது என அரசாங்கம் நாட்டுக்கு தெரிவித்த போது, மருந்து இறக்குமதி…
The post நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு- சுகாதார அமைச்சர் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு- சுகாதார அமைச்சர் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
