வவுனியாவில் இசை நிகழ்ச்சியில் அடிதடி – இருவர் கைது
7 view
வவுனியா நகரசபை மைதானத்தில் இடமபெற்ற இசை நிகழ்ச்சியின் போது அடிதடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். புதுவருட தினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் இசை நிகழ்வொன்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் குழுக்களுக்குள் வாய்தர்க்கம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா பொலிசார் அடிதடியில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர் The post வவுனியாவில் இசை நிகழ்ச்சியில் அடிதடி – இருவர் கைது appeared first on Tamilwin Sri Lanka.
The post வவுனியாவில் இசை நிகழ்ச்சியில் அடிதடி – இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் இசை நிகழ்ச்சியில் அடிதடி – இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
