ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை: பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை
14 view
2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (02.01.2023) ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில், ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பை புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ளார். உயர்தர பரீட்சையை குறித்த திகதியில் நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் செயற்பட்டு வருவதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போது உயர்தர பரீட்சை நடத்த பரீட்சை திணைக்களம் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தாள் அல்லது இதர எழுதுபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. இதற்கிடையில் உயர்தரப் பரீட்சை காரணமாக எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.என அவர் தெரிவித்துள்ளார். The post ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை: பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை appeared first on Today…
The post ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை: பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை: பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
