ஆண்டின் முதல் நாளிலேயே பெருமளவானோர் வைத்தியசாலையில் அனுமதி!
12 view
2023 புத்தாண்டின் ஆரம்பத்துடன் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களால் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (31) நள்ளிரவு முதல் தற்போது வரை இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, மோதல்கள் மற்றும் வாகன விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
The post ஆண்டின் முதல் நாளிலேயே பெருமளவானோர் வைத்தியசாலையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆண்டின் முதல் நாளிலேயே பெருமளவானோர் வைத்தியசாலையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
