யாழில், வாள்வெட்டு : ஒருவர் காயம்!
13 view
இன்றிரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாள்வெட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலதிக தெரியவருகையில், வாள்வெட்டிற்கு இலக்கானவரது வீடானது வாள்வெட்டு நடந்த இடத்திற்கு அருகாமையிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டுக்கு வெளியே வந்து வீதியில் நின்றவேளை முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாள்வெட்டினை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த நபர் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post யாழில், வாள்வெட்டு : ஒருவர் காயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில், வாள்வெட்டு : ஒருவர் காயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
