புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் – 67 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
6 view
புத்தாண்டு பிறந்ததில் இருந்து ஏற்பட்ட அனர்த்தங்களால் 67 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பதிவான அனர்த்தங்களில், வீதி விபத்துக்களால் 17 பேரும், பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடி விபத்தினால 4 பேரும், வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேரும், வாய்த்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 3 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்றைய தினம் மாத்திரம் வாகன விபத்துக்களினால், 42 பேரும், வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 பேரும், வாய்த்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 37 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் – 67 பேர் வைத்தியசாலையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் – 67 பேர் வைத்தியசாலையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
