சிக்கலில் உள்ள இலங்கைக்கு செல்ல வேண்டும் – தலாய் லாமாவுக்கு கோரிக்கை
6 view
பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவேண்டும் என்று இலங்கையின் பௌத்த பிக்குகள், திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த இலங்கையின் முக்கிய பிக்குகள் குழுவினரே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ராமாண்ய மகா சங்கத்தின் பிரதம மதகுரு மாஹூல்வேவே விமல தேரர் உட்பட்டவர்கள் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர். தலாய் லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு சென்றமை காரணமாக அங்கு பெரும்பாலானவர்கள் பயணம் செய்கின்றனர். இந்தநிலையில் அவர் இலங்கைக்கு வரவேண்டும். அவர் இலங்கைக்கு பயணம் செய்தால், அவரை பின்பற்றி பலர் இலங்கைக்கு பயணம் செய்வர். இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் அடைந்து நாடு பொருளாதாரத்தில் சிறக்கும் என்று விமல தேரர் உட்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர். எனினும் இலங்கையின் பௌத்த பிக்குகளின் கோரிக்கையை தலாய் லாமா ஏற்றுக்கொண்டாரா? என்ற தகவலை இந்த செய்தியை பிரசுரித்த இந்திய செய்தித்தளம் குறிப்பிடவில்லை. ஏற்கனவே 2015ஆம் ஆண்டு தலாய் லாமாவின் இலங்கை…
The post சிக்கலில் உள்ள இலங்கைக்கு செல்ல வேண்டும் – தலாய் லாமாவுக்கு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிக்கலில் உள்ள இலங்கைக்கு செல்ல வேண்டும் – தலாய் லாமாவுக்கு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
