அடுத்தடுத்து திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்கள்! வவுனியாவில் சம்பவம்
9 view
வவுனியாவில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. வவுனியா நகரப் பகுதியில் நேற்று இரவு (31.12) நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரப் பகுதியில் இருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று நீதிமன்றத்திற்கு முன்பாக சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக அதன் சாரதி கீழே குதித்துள்ளதுடன், வீதியால் சென்றவர்கள் மற்றும் அயலில் இருந்தவர்களின் துணையுடன் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் மோட்டர் சைக்கிள் தீயில் எரிந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளது. — வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றிய மோட்டர் சைக்கிள் ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மோட்டர் சைக்கிள் திருத்தும் நிலையம் மீது ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. புதுவருட தினமான இன்று (01.01) இடம்பெற்ற இவ் அனர்த்தம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிளசர் ரக மோட்டர் சைக்கிள் ஒன்று…
The post அடுத்தடுத்து திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்கள்! வவுனியாவில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்தடுத்து திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்கள்! வவுனியாவில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
