நாடளாவிய ரீதியில் புத்தாண்டினை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள்!
16 view
பிறந்திருக்கும் 2023ஆம் ஆண்டின் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் விஷேட அபிஷேசக ஆராதனையுடனான பூஜைகள் பக்திபூர்வமாக இடம்பெற்றது. அந்தவகையில் வண்ணைம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்தில் புத்தாண்டுக்கான சிறப்பு வழிபாடு பூஜைகள் இடம்பெற்றன. இவ் உற்சவ கிரியைகளை ஆலயபிரதம குரு சிவஸ்ரீ செ.ரமணீஸ்வர க்குருக்கள் நடாத்திவைத்தார். இதில் பலபாகங்களில் வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர். — ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களிலும் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. அந்தவகையில் வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதம குருக்கள் மயூரசர்மா குருக்கள் தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது ஆலயத்திற்கு வருகை தந்த பலரும் புதிய ஆண்டு சிறப்பாக அமைய வேண்டி இறைவனை வழிபட்டதுடன், தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். — புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா. சந்திரானந்த தலைமையில் விசேட…
The post நாடளாவிய ரீதியில் புத்தாண்டினை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடளாவிய ரீதியில் புத்தாண்டினை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
