தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது! – புத்தாண்டில் சஜித்
6 view
“நாட்டின் தற்போதைய ஆட்சியை மீட்சியாக மாற்றுவதற்கான முன்னணி நடவடிக்கைகள் இந்த வருடத்துக்குள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை இந்நாட்டு மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது என்பதே யதார்த்தம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “பாரிய நெருக்கடிகளைச் சந்தித்தும் பல நெருக்கடிகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் 2023 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளது. இருள் மறையும் வெற்றிக்கான பாதையைத் தெளிவுபடுத்தும் தீர்க்கமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இந்த ஆண்டு அமைய பிரார்த்திப்போம். ஒரு நாடாக கடந்த வருடம் முழுவதும் கேட்ட மற்றும் எதிர்கொண்ட பல செய்திகள் நல்லதை விட கெட்டவையாகவே இருந்தன. தூர நோக்கு இல்லாத ஆட்சி முறையால் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நிலைமைக்கு ஆளாகிய படுமோசமான ஆண்டாகவும், இந்த நாட்டில் பொதுமக்களின் தீர்க்கமான…
The post தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது! – புத்தாண்டில் சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது! – புத்தாண்டில் சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
