ஜனவரி மாதத்திற்குள் 20,000 வணிகங்களை மூட வேண்டிய அபாயம்!
6 view
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கடன்களை மீளச்செலுத்தும் மொரடொரியம் என்ற நிவாரணக்காலத்தை மேலும் நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு உள்ளூர் வணிக நிறுவனங்கள், மத்திய வங்கியிடம் வலியுறுத்தியுள்ளன. தேசிய வர்த்தக பாதுகாப்பு சபையின் கூற்றுப்படி, தேசிய பொருளாதாரத்தில் நிலவும் சவால்கள் காரணமாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் 1,000 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. இந்தநிலையில் தற்போதுள்ள அதிக வட்டி விகிதத்தில் கடனை செலுத்த முடியாமல் தவிப்பதாக உறுப்பினர்கள் தொடர்ந்து முறையிட்டு வருவதாக சபையின் தலைவர் மகேந்திர பெரேரா தெரிவித்தார். ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் மீளச்செலுத்தும் கால நீடிப்பு அவகாசம் 2022 டிசம்பர் 31, அதாவது இன்றுடன் முடிவடைகிறது. எனவே இந்த காலத்தை நீடிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தேசிய வர்த்தக பாதுகாப்பு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். வர்த்தகர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான இயல்பு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த நாட்டில் வங்கித் துறையும் வீழ்ச்சியடையும் என்றும்…
The post ஜனவரி மாதத்திற்குள் 20,000 வணிகங்களை மூட வேண்டிய அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனவரி மாதத்திற்குள் 20,000 வணிகங்களை மூட வேண்டிய அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
